beyouths_com@yahoogroups.com (chinthanep@yahoo.co.in)
ஏழை பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு
-பி.இந்திரா
தாராளமயமான சந்தையும், உலக மயக் கொள்கையும் கடைப்பிடிக்கப்பட் டால், உலகம் முழுவதும் வறுமையும், ஏற்றத்தாழ்வும் மறைந்து போகும் என தொடர்ந்து வாதாடப்படுகிறது.
1990களில் இந்தியாவிலும், இக் கூக்குரல் ஒலிக்கத் துவங்கியது. வெளி நாட்டுப் பொருட்கள் வந்து குவிந்தன. நிதி மற்றும் உற்பத்தித் துறைகள் தனி யார்மயமாக்கப்பட்டன. தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்த முற்பட் டார்கள். இப்படி பல்வேறு தாராளமய நடவடிக்கைகள் அமலாக்கப்பட்டன.
உலகம் முழுவதும் உழைப்பாளி வர்க்கத்தின் நிலைமை அவலமாக உள் ளது. எனினும், இந்தியாவிலும், மேலை நாடுகளிலும் உள்ள பொருளாதார மேதாவிகளும், உலகமயக் கொள்கை யை உயர்த்திப் பிடிப்பவர்களும் தங்கள் மோசடி வாதத்தைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
“உலகமய காலகட்டத்தில் சம்பள ஏற்றத்தாழ்வுகள் - வேலை நிலைமை கள் - அறிக்கை 2008” என்ற சர்வ தேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ஐ.எல்.ஓ.) ஆய்வறிக்கை, மேற்கண்ட மோசடி வாதத்தை சவப்பெட்டியில் அடைத்து அறைகின்ற கடைசி ஆணி யாக உள்ளது.
ஏராளமான தகவல்களை அது உள் ளடக்கி உள்ளது. வேலைவாய்ப்பு, கூலி, சம்பள இடைவெளி ஆகிய 3 அம்சங் களை பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு
உலகமய மற்றும் தாராளமயத்தின் பொற்காலமான 1990 முதல் 2007 வரை, உலகத்திலுள்ள வேலைவாய்ப்பு கள், 30 சதவீதம் வளர்ச்சி அடைந்துள் ளன. இது நல்ல எண்ணிக்கை போல் தோன்றுகிறது. ஆனால், 17 வருடங் களில் 30 சதவீதம் வளர்ச்சி என்பது ஒவ்வொரு வருடமும் 2 சதவீதத்துக்கும் குறைவானதே. மறுபுறத்தில், உலக மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் 2 சதமானத்துக்கும் அதிகமாக வளர்ந்து வருகிறது.
இந்தக் குறைவான வளர்ச்சி கூட எல்லா நாடுகளிலும் சமமாக ஏற்பட வில்லை. வளர்ச்சியடைந்த நாடுகளில் ஆண்டுக்கு ஒரு சதவீதமாக உள்ளது. ஆசியாவில் 2.8 சதவீதம். அதில் பெரும்பங்கு வகிப்பது சீனா.
கிழக்கு ஐரோப்பா மற்றும் ரஷ்யா வில் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. 1990களில் இந்நாடுகள் நொறுங்கிப் போயிருந்தன. இந்த நூற்றாண்டில் அவை மெதுவாக முன்னேறத் தொடங் கியுள்ளன. இந்த நாடுகளிலேயும் சீரான வளர்ச்சி இல்லை.
மேலும், வேலையற்றவர்களில் பெண்களே அதிகமாக உள்ளனர். இது மற்றொரு ஏற்றத்தாழ்வாகும். மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் வேலை யற்றவர்களில் 80 சதவீதம் பெண்கள்.
உலகமய காலத்தில் உருவாக்கப் பட்ட பணியிடங்கள் 100 என்றால், அவற்றில் 60 பெண்களுக்குக் கிடைத் தது - பணக்கார நாடுகளிலும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும்.
ஆனால், ஆசியா, வடக்கு ஆப்பி ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் 20 முதல் 35 சதவீதம் வரைதான் பெண் களுக்கு வேலை கிடைத்தது.
வேலைவாய்ப்புகளிலிருந்து வெகு தூரத்தில், லட்சக்கணக்கான பெண்கள் உள்ளனர் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.
வேலை இல்லாதவர்களின் எண் ணிக்கையிலும் இது பிரதிபலிக்கிறது. ஆசியா - மத்திய கிழக்கு நாடுகளில் 80 முதல் 90 சதவீதம் பெண்கள். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் 60 சதவீதம் பெண்கள்.
கூலி
மொத்த வருமானத்தை உழைப் பாளி மக்கள் பகிர்ந்து கொள்வது பெரும்பான்மையான நாடுகளில் குறைந்துள்ளது. லத்தீன் அமெரிக்கா வில், உலகமயக் கொள்கை வெகுவேக மாக அமல்படுத்தப்பட்ட 1993 - 2002 காலகட்டத்தில், ஒட்டு மொத்த வருமா னத்தில் தொழிலாளர்களுக்கான கூலி யின் பங்கு 13 சதவீதம் சரிவடைந் துள்ளது.
ஆசியாவில், 1985 - 2002ல் 9 சத வீதம் சரிந்துள்ளது. வளர்ந்த நாடு களில் வெகுவாக சரிந்துள்ளது. (1980 - 2005). விதிவிலக்காக, 1995 - 2003 காலகட்டத்தில், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலும், ரஷ்யாவிலும் இந்த சரிவு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. உலகமயம் குறித்த மறுசிந்தனை இந்த நாடுகளில் இந்தகாலகட்டத்தில் மேலோங்கி வந்துள்ளது.
ஒட்டுமொத்த வருமானம் அல்லது வளர்ச்சியில் உழைப்பாளி மக்கள் பெறு வது ஒரு மிகச் சிறிய பங்குதான்!
மறுபுறத்தில், லாபத்தின் பெரும் பங்கை முதலாளிகள் தட்டிச் செல் கிறார்கள். அவர்களின் செல்வம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே யிருக்கிறது என்பது இவ்வறிக்கை மூலம் தெளிவாகிறது.
பணக்கார நாடுகள் மற்றும் இந் தியா, பிரேசில், சீனா, ரஷ்யா, தென் னாப்பிரிக்கா ஆகிய 5 முக்கிய வளர் பொருளாதார நாடுகள் உள்ளிட்ட 34 நாடுகளில், 24ல் உற்பத்தி பெருகி உள் ளது. ஆனால், தொழிலாளர்களுக்கான சம்பளத்தின் பங்கு குறைந்துள்ளது.
இந்தியா அதில் கடைசி தரத்தில் உள்ளது. 1990 - 2006 காலகட்டத்தில், இந்தியாவில் உற்பத்தி 5 சதவீதம் அதி கரித்துள்ளது; ஆனால், தொழிலாளிகள் சம்பளம் 1 சதவீதம் கூட உயரவில்லை.
சம்பள உயர்வு தருவதில் சீனா முன் னணி தரத்தில் உள்ளது. அங்கு சம் பளம் வருடத்திற்கு 10 சதவீதம் உயர்ந் துள்ளது. அங்கு உற்பத்தி வருடத்திற்கு 9 சதவீதம் உயர்ந்துள்ளது.
பிற நாடுகளில், தொழிலாளிகள் கடுமையாக உழைக்கிறார்கள். உற் பத்தியை அதிகரிக்கிறார்கள். ஆனால், அந்த லாபத்தில் அவர்களுக்கு எந்தப் பங்கும் கிடைப்பதில்லை. அப்பட்டமான சுரண்டலின் அவலட்சணமான நிலை மை இது.
சம்பள ஏற்றத்தாழ்வுகள்
1990 - 2006 காலகட்டத்தில், 85 நாடுகளைப் பற்றிய ஆய்வின்படி, அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு நாடு களில் சம்பள இடைவெளி அதிகரித் துள்ளது.
மத்தியகிழக்கு மற்றும் சஹாரா நாடுகளில் இந்த இடைவெளி அதிக மாக உள்ளது. பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் இடைவெளி சற்று குறைந்துள்ளது.
ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவில் அதிகரித்துள்ளது. சீனாவில் மிக அதி கமாக இடைவெளி அதிகரித்துள்ளது.
ஒருநாட்டில், வருமானத்தில் முதல் 10 சதவீதம் உள்ளவர்களையும், கடைசி 10 சதவீதம் உள்ளவர்களையும் ஒப்பிட் டுப் பார்த்து இந்த நிலைமையை அலச லாம். 27 நாடுகளின் புள்ளி விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 18 நாடு களில் சம்பள இடைவெளி அதிகரித் துள்ளது.
உச்சகட்டமாக இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் பிரேசில் உள்ளன. மிகக் குறைவாக பெல்ஜியம் மற்றும் நார்வே நாடுகள் உள்ளன.
ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஹாங் காங், நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் 15 மிகப் பெரிய கம்பெனிகளின் உயர் அதிகாரி களின் சம்பளம், சாதாரண தொழிலாளி யின் சம்பளத்தை விட 71 முதல் 183 மடங்கு அதிகம். அமெரிக்காவில்தான் இந்த வேறுபாடு மிக அதிகம். அங்கு சாதாரண தொழிலாளியின் சம்பளம் 56,284 டாலர். உயர் அதிகாரியின் சம் பளம் ஒரு கோடியே 3 லட்சம் டாலர்.
இது ரொக்க பட்டுவாடா மட்டுமே. போனஸ், பென்சன் பங்குகள் என்ற வகையில் அதிகாரிகளுக்கு ஏராளமான கூடுதல் வருமானம் வருகிறது. இதை யெல்லாம் சேர்த்தால் 2003ல் ஓர் அதி காரியின் வருமானம் 1 கோடியே 60 லட் சம் டாலரிருந்து, 2007ல் 2 கோடியே 40 லட்சம் டாலராக உயர்ந்துள்ளது. இது ஆண்டுக்கு 10 சதவீதம் வளர்ச்சி (தலை சுற்றுகிறதா?).
இந்த காலகட்டத்தில் சாதாரண தொழிலாளி ஓர் ஆண்டுக்கு பெற்ற சம் பள உயர்வு - 0.7 சதவீதம்தான்!
வேறுவிதமாகச் சொன்னால், ஓர் அமெரிக்க அதிகாரி சாதாரண தொழி லாளியை விட 321 மடங்கு அதிக சம் பளத்தை 2003ல் வாங்கினார். 2007ல் அது 521 மடங்காகியுள்ளது.
இதுதான் சுரண்டல் அமைப்பின் உண்மை முகம்! நவீன முதலாளித்துவ அமைப்பில் லாபத்தை கொள்ளையடிக் கும் கொடுமை!
உலகமய காலத்தில் ஏற்றத்தாழ்வு கள் -
பணக்காரர்கள் - ஏழைகள்
பணக்கார நாடுகள் - ஏழை நாடுகள்
என்ற இடைவெளிகள் கடுமையாக அதி கரித்துள்ளன.
யானை வரும் பின்னே, மணி யோசை வரும் முன்னே என்பது போல இந்த மோசமான ஏற்றத்தாழ்வு நிலை யைத் தொடர்ந்து, பொருளாதார நெருக் கடி வெடித்து, வேலையின்மையைப் பெருக்கி, ஏழைகளை மேலும் அதல பாதாளத்தில் தள்ளியுள்ளது.
இந்த நெருக்கடிக்குப் பிறகும் முத லாளிகள் கூவுகிறார்கள் - திவாலாகிப் போன நிறுவனங்களை எல்லாம் அர சாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும்; ஆட்குறைப்பும், சம்பளவெட்டும் அமல் படுத்த வேண்டும் என்று.
வேறு வார்த்தையில் சொல்வதா னால்-
அவர்கள் பாக்கெட்டுகளுக்குள் லாபம் கொட்டியது. சாதாரண ஜனங் களின் தலையில் நஷ்டத்தைத் தூக்கி வையுங்கள்- என்கிறார்கள்.
இதைத்தான் நம் ஊர்ப் பக்கம் “ஒரு கண்ணில் வெண்ணெய் - மறு கண் ணில் சுண்ணாம்பு” என்பார்கள்.
இந்தச் சுண்ணாம்பை மேலும் மேலும் நம் மீது அடிக்கத்தான் “இந் தியா ஒளிர்கிறது” குரூப்பும், “ஜெய் ஹோ” குரூப்பும் தேர்தலைச்சொல்லி நம்மை நோக்கிப் பாய்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
தப்பிப்பது மட்டுமல்ல, எதிர்த்துத் தடுப்பதும் நம் உடனடி வேலை!
(ஆதாரம் : சவேராவின் கட்டுரை, வாய்ஸ் ஆப் வொர்க்கிங் வுமன்)
onsdag 15. april 2009
Abonner på:
Legg inn kommentarer (Atom)
1 kommentar:
LPG has certainly reduced poverty ratio in many nations, esp India.
this talk of the rich-poor divide increasing is a fallacy.
suppose if all the citizens of a nation are near starvation and have only one meal a day, then that nation will have most equality in income, etc, when compared to a developed nation like Finland.
All experiments with socilaism and communism which tried to 're-distribute' wealth and level the field failed miserably and actualy increaded poverty and repression.
a old quote :
Countries that "did nothing" about poverty during the twentieth century frequently became rich through gradual economic growth. Countries that waged "total war" on poverty frequently not only choked off economic growth, but starved. – Bryan Caplan
Legg inn en kommentar